அட கொடுமையே.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார தந்தை...

Published : May 02, 2022, 05:25 PM ISTUpdated : May 02, 2022, 05:30 PM IST
 அட கொடுமையே.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார தந்தை...

சுருக்கம்

ஒன்பது வயது மகளை நண்பர்களுடன் சேர்ந்து தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாதிக்கப்பட்ட சிறுமி தனது  பாட்டியிடம் கூறியதை அடுத்து விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .  

ஒன்பது வயது மகளை நண்பர்களுடன் சேர்ந்து தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது  பாட்டியிடம் கூறியதை அடுத்து விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது கிழவிகளை வரை வயது வித்தியாசமின்றி பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். இந்த குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதுவும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தையே தனது நண்பர்களுடன் சேர்ந்து மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இது அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் ஜாஷ்நகரில் நாராயண்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று வந்தது.

அதில் அந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு நபருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் பாட்டி குழந்தைகளை தந்தையிடம் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு குடிபோதையில் நண்பர்களுடன் வீட்டிற்கு வந்த குடிகார தந்தை தனது இரண்டு சகோதரர்களுடன் உறங்கிக்கொண்டிருந்த 9 வயது மகளை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்று அங்கு மகள் என்றும் பாராமல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் 3 நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை வெறோரு அறைக்கு அழைத்துச் சென்ற அந்த கும்பல் அங்கு சிறுமியை நாசம்  செய்தது.

பின்னர் பொழுது விடிந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி தனது பாட்டியிடம் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவளின் பாட்டி அக்கொடுமை  குறித்து போலீசில் புகார் அளித்தார். உடனே புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் அந்த சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!