
இளம் பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் அடைத்து வைத்து துணியால் வாயைப் பொத்தி மாறி மாறி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்ட போது வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்திலும் அந்த கும்பல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் அந்த பெண் கொடுத் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது காதலிப்பது போல் நடித்து கற்பழிப்பது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொண்டு வரதடசணை கேட்டு கொடுமைப்படுத்துவது. பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தல் போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதை தடுக்க போலீசார் காவல்துறையும் எத்தனையோ முயற்சிகளை முன்னெடுத்தும் குற்றங்கள் குறைந்த பாட்டில்லை. இந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்ணை 5 பேர் கொண்டு கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த கும்பல் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டனர். அதன் பிறகு அந்தப் பெண்ணின் வாயில் துணியை அடைத்து ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண்ணை வன்புணர்வு செய்து கொண்டே வீடியோவும் எடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல் நிலைத்தில் புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். முன்னதால் விஷயத்தை வெளியில் சொன்னால் வீடியோ வெளி விட்டுவிடுவோம் என்றும், கும்பத்தையோ கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை அவர்கள் மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் சில வாரங்கள் அமைதி காத்தார். உங்களை குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பெண் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தெரிவித்தார். அதே நேரத்தில் அவர்கள் அந்த பெண்ணை கற்பழித்த வீடியோவும் வெளியிட்டுள்ளனர். அது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் போலீசார் இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் தலைமறைவானதாக தெரிவித்துள்ள போலீசார் அவர்கள் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.