கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அப்பகுதி உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து கம்பி கட்டும் தொழிலாளி சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார்.
ஓசூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அப்பகுதி உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து கம்பி கட்டும் தொழிலாளி சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சிறுமி மற்றும் தாயார் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுப்பெண்.. மறுநாளே பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் கணவர்.. நடந்தது என்ன?
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, பதறிய தாயார் மகளை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க;- உன்னால தான் நான் கர்ப்பமா இருக்கேன்.. கதறிய கல்லூரி மாணவி.. மனம் இறங்காத காதலன்.. இறுதியில் நடந்தது என்ன?
இதுதொடர்பாக தாயார் சிறுமியிடம் விசாரித்த அழுது கொண்டே அதிர்ச்சி தகவலை கூறினார். வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்ததால் சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- அடப்பாவி.. கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. எப்படி தெரியுமா?