மயிலாடுதுறை மாவட்டம் மணமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்(38). இவரது மனைவி கிருத்திகா (29). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றிய கலைவாணன் கடந்த மாதம் விடுமுறையில் ஊர் திரும்பியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்(38). இவரது மனைவி கிருத்திகா (29). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றிய கலைவாணன் கடந்த மாதம் விடுமுறையில் ஊர் திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுப்பெண்.. மறுநாளே பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் கணவர்.. நடந்தது என்ன?
வீட்டிற்கு வந்த கலைவாணன் தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டுள்ளார். அப்போது கிருத்திகா கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும் கணவரின் உறவினர்களுக்கும் கொடுத்தது மட்டுமல்லாமல் ஊதாரித்தனமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவி கிருத்திகாவின் கழுத்தை கணவர் கலைவாணன் அறுத்துள்ளார். ரத்த வெள்ளதத்தில் துடித்த கிருத்திகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- அடப்பாவி.. கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. எப்படி தெரியுமா?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கலைவாணனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.