30 இடங்களில் வெட்டு; தலை துண்டித்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் - திருப்பூரில் பரபரப்பு

Published : Jul 01, 2023, 12:22 PM ISTUpdated : Jul 19, 2024, 11:55 PM IST
30 இடங்களில் வெட்டு; தலை துண்டித்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் - திருப்பூரில் பரபரப்பு

சுருக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப தகராறு மனைவியின் தலையை வெட்டி படுகொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தவர் மணிகண்டன்(வயது 37). மதுரையை சேர்ந்த இவர் தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாக குடியிருந்து வருகிறார். இவர் அருகில் உள்ள கோவிலில் பூ  விற்பனை செய்து பூசாரியாக செயல்பட்டு வருகிறார்.  

கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை எழுந்து வரும் நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட சண்டையின் போது மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து பல இடங்களில் வெட்டி மணிகண்டன் கொலை செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் சண்டை தொடர்பாக கேட்ட போது தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் பெண்ணின் உடலையும், தலையையும் கைப்பற்றி மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தந்தை வாங்கிய கடனுக்காக சிறுமியை கடத்திய நிதி நிறுவன ஊழியர் கைது

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன், பவித்ராவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்து தற்போது டி எம் எஸ் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. நேற்று நடந்த சண்டையில் மணிகண்டன் பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்திரா மணிகண்டனை அடித்ததாகக் கூறப்படுகிறது. 

அயர்ந்து தூங்கிய செவிலியர்; பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை - அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்த நிலையில் இச்சம்பவம் அறிந்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்து பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!