குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!

By Raghupati R  |  First Published Oct 15, 2022, 11:24 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் கோயில் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் பூஜை செய்து வருகின்றனர். அவர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சில தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் சம்பந்தமாக நடராஜர் கோவில் பொது தீட்சதர்ர்கள் செயலாளர் கார்த்தி என்கிற ஹேம சபேச தீட்சதர் உட்பட மூன்று தீட்சதர்களை கடலூர் மாவட்ட சிறப்பு படைப்பிரிவு போலீசார் கைது செய்து கடலூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கோயில் பொது தீட்சதர் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் கீழ வீதியில் சாலை மறியல் செய்தனர்.

இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

இதனால், சம்பவ இடத்தில் சிதம்பர நகர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட சில தீட்சிதர்களை போலீசார் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

click me!