4 பள்ளி சிறுமிகளை நாசம் செய்த மடாதிபதி.. தாய் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

Published : Oct 15, 2022, 11:00 PM ISTUpdated : Oct 15, 2022, 11:05 PM IST
4 பள்ளி சிறுமிகளை நாசம் செய்த மடாதிபதி.. தாய் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

சுருக்கம்

மடாதிபதி ஒருவர் பள்ளி சிறுமிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இவர் மடத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மற்றும் பெண் வார்டன் பசவாத்தியா, மைசூரு சீடர் பரமசிவய்யா, கங்காதரய்யா, பசவலிங்கா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 1 ஆம் தேதி மடாதிபதியை போக்சோ வழக்கில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

பாதிக்கப்பட்ட 2 மாணவிகளின் தாய் அளித்துள்ள புகாரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப வறுமை காரணமாக 2 மகள்களுடன் முருக மடத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன். அதே மடத்தில் 2 மகள்களும் தங்கி படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களை மடத்தின் இருந்த பள்ளியிலேயே நான் சேர்த்தேன். தற்போது முதல் மகள் 3 ஆம் வகுப்பும், இரண்டாவது மகள் 1 ஆம்  வகுப்பும் படித்து வருகின்றனர்.

நாங்கள் ஒரே மடத்திற்குள் இருந்தாலும் மகள்களை பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு மூத்த மகளை முருக மடாதிபதியை பார்ப்பதற்காக அவரது அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் வன்கொடுமை செய்துள்ளார். 2020 ஆம் ஆண்டு 2வது மகளை மிரட்டி வன்கொடுமை செய்தார்.

இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இரண்டு பேரையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். மகள்கள் வயதுக்கு வரும்வரை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல மைசூருவை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய 2 மாணவிகளையும் மடாதிபதி பலாத்காரம் செய்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். கர்நாடகாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை