அதிர்ச்சி!! ஆசிரியர் ஆடையை கழற்ற சொன்னதாக கூறப்படும் சம்பவம் .. அவமானம் தாங்காமல் தீக்குளித்த மாணவி..

Published : Oct 15, 2022, 03:54 PM ISTUpdated : Oct 15, 2022, 03:55 PM IST
அதிர்ச்சி!!  ஆசிரியர் ஆடையை கழற்ற சொன்னதாக கூறப்படும் சம்பவம் .. அவமானம் தாங்காமல் தீக்குளித்த மாணவி..

சுருக்கம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சீருடையில் பிட் பேப்பரை மறைத்து வைத்து தேர்வெழுதிய 9 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஆடைகளை கழற்ற சொன்னதால், அவமான தாங்காமல் மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   


பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வந்த மாணவி, தனது அறைக்கு சென்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பலத்த தீக்காயமடைந்த மாணவி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிக்கிறார். அவரது தனது வாக்குமூலத்தில்,” தேர்வு கண்காணிப்பாளர் என்னை வகுப்பறைக்கு அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்று, எனது சீருடையை கழற்ற சொன்னார். நான் பலமுறை மறுப்பு தெரிவித்தும், அவர் என்னை பிடிவதமாக “பிட் பேப்பர்” எனது சீருடையில் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய ஆடையை கழற்றச் சொன்னார்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க:Hunger index: உலகப் பட்டினிக் குறியீடு: 121 நாடுகளில் இந்தியாவுக்கு 107-வது இடம்: இலங்கையைவிட மோசம்

மேலும் மாணவியின் தாயார்,” என் மகளால் அவமானத்தை தாங்க முடியவில்லை. வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலே இது நடந்துவிட்டது” என்று கூறி கதறி அழுதார்.இதுக்குறித்து பள்ளி நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. 

இந்த சம்பவம் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியை முற்றுகையிட்ட அவர்கள், ஆசியர் மீது நடவடிக்கை எடுக்கமாறும் வலியுறுத்தினர். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம்!!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!