சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு வாக்குமூலம்:
தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, துரைப்பாக்கத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று காலை கைது செய்தனர். 15 நாள்நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சதீஷ் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், ‘என் வீட்டின் அருகே உள்ள காவலர் குடியிருப்பில்தான் சத்யாவின் வீடும் உள்ளது. இதனால் அவரை அடிக்கடி பார்ப்பேன். அவரது தாய் ராமலட்சுமி, ஆதம்பாக்கத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்ததால் அவரையும் நன்கு தெரியும்.
பள்ளி வயது காதல்:
நானும், போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ராமலட்சுமியும் என்னிடம் அன்பாக பேசுவார். 4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படிக்கும்போது, சத்யா மீது காதல் ஏற்பட்டது. அவரை பின்தொடர்ந்து வந்தேன். ஒருநாள் அவரிடம் செல்போன் எண்ணை கேட்டேன். அவர் தரவில்லை. இதனால், அவரது தோழிகள் மூலம் சத்யாவின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம் காதலை சொன்னேன். ஆனால், அவர் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார் சத்யா.
undefined
அதுமுதல், வீட்டில் இருந்து தனியாக பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்தார். இதனால், நானும் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அவரிடம் பேசுவேன். படிப்பு, குடும்பம் குறித்து நான் அக்கறையோடு பேசியதால், சத்யாவுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டது. நாளடைவில், என் காதலை ஏற்றுக்கொண்டார். நாங்கள் ஒன்றாக செல்வது குறித்து சத்யாவின் தாய்க்கு தெரிந்து, சத்யாவை கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க..Raid : தீபாவளி வசூல் வேட்டையில் அரசு அதிகாரிகள்.. சாட்டையை சுழற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை - ‘பரபர’ ரெய்டு !
கல்லூரிக்கு செல்ல கூடாது:
அதன் பிறகும் எங்கள் பழக்கம் தொடர்ந்ததால், இனிமேல் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார். பலரிடம் விசாரித்ததில், என் மீது ராமலட்சுமிக்கு நல்லஎண்ணம் இல்லை. இதையும் மகளிடம்கூறிய அவர், ‘இனியும் நீங்கள் ஒன்றாகசுற்றினால், சாவதை தவிர வேறு வழி இல்லை’ என்று மகளிடம் கூறியுள்ளார்.
இதை என்னிடம் கூறிய சத்யா, ‘எனக்கு என் அப்பா, அம்மா, குடும்பம்தான் முக்கியம். அதனால், என்னுடன் பேச வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டார். சத்யா இப்படி கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனாலும், என் தரப்பு விளக்கத்தை கூறுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால்,செல்போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை.
காதலை மறுத்த சத்யா:
நான் சத்யாவை சந்திக்க கூடாது என்பதற்காக, சத்யாவை அவரது பெற்றோரே தினமும் வீட்டில் இருந்து ரயில் நிலையத்தில் விடுவதும், கல்லூரி முடிந்த பிறகு ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்வதுமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து, சத்யாவை பின்தொடர்ந்து வந்து நான் தொந்தரவு செய்வதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்படி 2 முறை புகார் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை
கொலைக்கான காரணம்:
அதன்பிறகும்கூட, சத்யாவை மறக்கமுடியவில்லை. தோழிகள் மூலம் சத்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். இனிமேல் சந்திக்க வேண்டாம் என்று கூறினார். சத்யாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தது தெரியவந்தது. இன்ஜினீயர் மாப்பிள்ளைக்கு சத்யாவை திருமணம் செய்து வைக்க பேசி முடித்துள்ளதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன்.
தந்தையின் அஜாக்கிரதை:
ஆண்டுக்கணக்கில் பழகியும், காதலை ஏற்க மறுக்கிறாரே என்ற கோபம் வந்தது. ‘எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது’ என்ற எண்ணம் எழுந்ததால் அவளை கொன்றேன் என்று கூறியுள்ளார். சதீஷின் குடும்பத்தார் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 14 வயது இருக்கும் போதே இருந்து, சத்யா பின்னாடி சுற்றியுள்ளார்.
ஒருகட்டத்தில் சதீஷின் தந்தையும் இதை பற்றி தெரிந்தும் கண்டுகொள்ளாததால், சதீஷ் இதனை சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார், ஆரம்பத்திலேயே சதீஷின் தந்தை கண்டித்து இருந்தால் சத்யா மற்றும் சத்யாவின் தந்தை என இருவரின் உயிர்கள் பறிபோகும் அளவிற்கு இருந்திருக்காது என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?