தாயிடம் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மகன்.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

Published : Jul 27, 2020, 06:00 PM IST
தாயிடம் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மகன்.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

சுருக்கம்

சென்னை சைதாப்பேட்டையில் தாயின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் தாயின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (46). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மேற்கு சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்த செல்வி என்பவருடன் முனியாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் மேற்கு சைதாப்பேட்டையிலேயே ஒன்றாக கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். இது செல்வியின் மகனான வேலாயுதத்திற்கு பிடிக்கவில்லை. அடிக்கடி முனியாண்டியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

மீண்டும் அதேபோல் நேற்று இரவும் சண்டை நடந்துள்ளது. அப்போது வேலாயுதம் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டில் இருந்த முனியண்டியை கத்தியால் குத்தினர். உயிர் பிழைக்க அவர் தெருவில் தலைதெறிக்க ஓடியுள்ளார். ஆனால், வேலாயுதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர்,  வெட்டி கொலை செய்து விட்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டனர். 

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி