ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கு.. சதீஷ் மீது குண்டாஸ் பாய்ந்தது..!

Published : Nov 05, 2022, 10:55 AM ISTUpdated : Nov 05, 2022, 11:10 AM IST
 ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கு.. சதீஷ் மீது குண்டாஸ் பாய்ந்தது..!

சுருக்கம்

சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிபிசிஐடி காவல்துறை அளித்த பரிந்துரையை அடுத்து சென்னை காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  

சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிபிசிஐடி காவல்துறை அளித்த பரிந்துரையை அடுத்து சென்னை காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலிக்க மறுத்ததால் ரயிலில் தள்ளி கொலை செய்ததாக தகவல் வெளியானது. இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- காதலனை கொலை செய்தால் போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலம்..!

இதனையடுத்து சத்யா கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி  உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார்  தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதில், சத்யாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.  தான் சத்யாவுடன் பழகுவதை பிடிக்காத அவரது தாயார் தான், சத்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்ததாகவும், இதன் காரணமாக சத்யா தன்னிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறியுள்ளார்.  இதனையடுத்து சத்யாவை தொடர்ந்து பலமுறை பேச தொடர்பு கொண்ட போதும் அவர் பேச மறுத்ததால் ரயில் முன் தள்ளி கொன்றேன் என்றார்.

இதையும் படிங்க;-  ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை..! சத்யா இறந்து போவார்னு நினைக்கலை- கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

தற்போது புழல் சிறையில் உள்ள சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிபிசிஐடி காவல்துறை அளித்த பரிந்துரையை அடுத்து சென்னை காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  

இதையும் படிங்க;- தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!