1.3 லட்சத்தை இழந்த 76 வயது மூதாட்டி… ஏ.டி.எம் கார்டை மாற்றிக்கொடுத்து மோசடி செய்த மர்ம நபர்!!

Published : Nov 04, 2022, 04:36 PM IST
1.3 லட்சத்தை இழந்த 76 வயது மூதாட்டி… ஏ.டி.எம் கார்டை மாற்றிக்கொடுத்து மோசடி செய்த மர்ம நபர்!!

சுருக்கம்

அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் உதவி கேட்ட 76 வயது மூதாட்டி ரூ.1.3 லட்சத்தை இழந்த சம்பவம் தானேவில் நிகழ்ந்துள்ளது. 

அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் உதவி கேட்ட 76 வயது மூதாட்டி ரூ.1.3 லட்சத்தை இழந்த சம்பவம் தானேவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே திவா என்ற பகுதியை சேர்ந்த 76 வயது மூதாட்டி ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு தனியார் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருந்த ஒரு நபரிடம் 50,000 ரூபாய் எடுத்து தரும்படி உதவி கேட்டுள்ளார். அந்த நபர் எடுத்துக்கொடுத்துவிட்டு ஏ.டி.எம் கார்ட்டை மாற்றிக்கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வரதட்சணையாக கொடுத்த காரால் அத்தையை கொன்ற மணமகன்… உ.பி.யில் நிகழ்ந்த பயங்கரம்!!

இதை அறியாத மூதாட்டி அதை பெற்றுக்கொண்டு வந்துவிட்டார். பின்னர் மீண்டும் பணம் எடுக்க ஏ.டி.எம் சென்ற போது தான் அந்த கார்டு தன்னுடையது அல்ல என்பதை உணர்ந்துள்ளார். இதை அடுத்து தனது வங்கி கணக்கில் இருப்பை சரிப்பார்த்த போது அதில் இருந்து பணம் அனைத்தும் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: செய்தித்தாளை யாரும் எடுக்கலையா? அப்போ இதான் நம்ம திருட வந்த வீடு… காசியாபாத்தில் நிகழ்ந்த நூதன கொள்ளை!!

இதுக்குறித்து மும்ப்ரா காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரை தேடி வருகின்றனர். இதுக்குறித்து காவல்துறையினர் கூறுகையில், மூதாட்டியின் வழக்கை விசாரித்து வருவதாகவும் ஏடிஎம் மையத்தில் தெரியாத யாரிடமும் உதவி பெற வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை