வரதட்சணையாக கொடுத்த காரால் அத்தையை கொன்ற மணமகன்… உ.பி.யில் நிகழ்ந்த பயங்கரம்!!

Published : Nov 03, 2022, 10:53 PM IST
வரதட்சணையாக கொடுத்த காரால் அத்தையை கொன்ற மணமகன்… உ.பி.யில் நிகழ்ந்த பயங்கரம்!!

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் மணமகனுக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரால் அத்தையை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் மணமகனுக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரால் அத்தையை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது மணமகனுக்கு வரதட்சணையாக கார் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்திய இராணுவத்திற்கான புதிய போர் சீருடை… வடிவமைப்புக்கு காப்புரிமை பெற்று அசத்தல்!!

மணமகனிடம் அந்த காரை மணமகளின் சகோதரர் மைதானத்திற்குள் ஓட்டச் சொன்னதாகக் கூறப்படுகிறது. மணமகன் காரை ஓட்டத் தொடங்கினார். அப்போது கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து உணவு அருந்திக் கொண்டிருந்த இடத்திற்குள் புகுந்தது.

இதையும் படிங்க: செய்தித்தாளை யாரும் எடுக்கலையா? அப்போ இதான் நம்ம திருட வந்த வீடு… காசியாபாத்தில் நிகழ்ந்த நூதன கொள்ளை!!

இந்த கார் இடித்ததில் மணமகனின் அத்தையை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருந்தினர்கள் பலர் காயமடைந்தனர். இதை அடுத்து காயமடைந்த மற்ற உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணமகன் உத்தரபிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிள் என்று கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!