பழிக்கு பழி.. சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் ஷாக்கிங் நியூஸ்.. 4 பேர் கோர்ட்டில் சரண்..!

By vinoth kumar  |  First Published Nov 5, 2022, 9:40 AM IST

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகூர்கனி (33) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு கத்திஜா என்ற மனைவியும், முகமது அகில், முகமது ஆதில் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.


சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பிரியாணி கடை உரிமையாளர் நாகூர்கனி(33) கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகூர்கனி (33) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு கத்திஜா என்ற மனைவியும், முகமது அகில், முகமது ஆதில் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாலை பிரியாணி கடை முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த போது 3 இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல்  நாகூர்கனியை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பெற்ற மகளை சீரழித்து கர்ப்பிணியாக்கிய காமக்கொடூரம்.. தந்தை உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்.!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வியசார்பாடியை சேர்ந்த கரண்குமார் என்பவனை தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஜூலை மாதம் எர்ணாவூர் பகுதியில் மசூதிக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜமாத் உறுப்பினரான உமர் பாஷா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்க நாகூர் கனி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க;-  காதலனை கொலை செய்தால் போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலம்..!

இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றதத்தில் அரும்பாக்கத்தை சேர்ந்த ஜீவன், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆசை, வடபழனியை சேர்ந்த அகஸ்டின், நீலாங்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகிய 4 பேர் சரணடைந்துள்ளனர். மேலும், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க;-   அடகடவுளே.. 9 மாத நிறைமாத கர்ப்பிணி என்று பாராமல் வரதட்ணை கேட்டு ஓயாத டார்ச்சர்.. விபரீத முடிவு எடுத்த பெண்..!

click me!