வேளாங்கண்ணிக்கு நடைபயணம் சென்ற சென்னை கல்லூரி மாணவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை..!

Published : Aug 23, 2022, 01:29 PM ISTUpdated : Aug 23, 2022, 01:31 PM IST
வேளாங்கண்ணிக்கு நடைபயணம் சென்ற சென்னை கல்லூரி மாணவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை..!

சுருக்கம்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நண்பர்களுடன் நடைபயணம் சென்ற கல்லூரி மாணவனை மர்ம கும்பல்  அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நண்பர்களுடன் நடைபயணம் சென்ற கல்லூரி மாணவனை மர்ம கும்பல்  அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பாடியநல்லூர் அண்ணாதெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் அபிஷேக் (20). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு நடைபயணம் மேற்கொண்டார். அவருடன் 10 பேரும் சென்றனர்.

இதையும் படிங்க;- நைட் ஆனாவே பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. தூங்குறவன எழுப்பியும் டார்ச்சர் பண்றா.. கதறும் கணவர்..!

நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கைப்பாணி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது 2 பைக்கில் பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அபிஷேக்கை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பெட்ரோல் பங்க், கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! வசமாக சிக்குகிறார் பாஜக பிரமுகர்? பதற்றம்!போலீஸ் குவிப்பு

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!