ஃபுல் மப்பில் வந்து ஹோட்டல் வாசலில் வாந்தி எடுத்த அட்வகேட்.. தட்டிகேட்டதால் உரிமையாளர் மண்டை உடைப்பு..!

Published : Aug 23, 2022, 11:50 AM IST
 ஃபுல் மப்பில் வந்து ஹோட்டல் வாசலில் வாந்தி எடுத்த அட்வகேட்.. தட்டிகேட்டதால் உரிமையாளர் மண்டை உடைப்பு..!

சுருக்கம்

சென்னை ராயபுரத்தில் உணவகம் ஒன்றின் முன்பு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட கடை உரிமையாளர், ஊழியர்களை கத்தி, இரும்பு ராடு கொண்டு தாக்கிய 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ராயபுரத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்பு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட கடை உரிமையாளர், ஊழியர்களை கத்தி, இரும்பு ராடு கொண்டு தாக்கிய 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மெட்ராஸ் தாபா என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. நேற்று இரவு இந்த உணவகத்தின் முன்பு சில நபர்கள் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போதே குடிபோதையில் இருந்த ஒருவர்  ஹோட்டல் முன்பு வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் உணவகத்தின் ஊழியர் சற்று தள்ளிச் செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது போதையில் இருந்த நபர்கள் கடை ஊழியர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இததனையடுத்து, மதுபோதையில் இருந்தவர்கள்  சிலரை வரவழைத்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளரையும் கத்தி, இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தினார்.

இந்த சம்பவம் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ராயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது,  தாக்குதலில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் உட்பட தகராறில் ஈடுபட்ட அனைவரும் பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர்கள் என தெரியவந்துள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த ஹோட்டலின் உரிமையாளர் 60 வயதான குகன் தலையில் கத்தி, இரும்பு கம்பியால் தாக்கியதில் 13 தையல்கள் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!