
படிப்பில் இருந்து தப்பிக்க 16 வயது பள்ளிக்கூட சிறுவன், சக மாணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் படிப்பின் மீது நாட்டம் மின்றி அதை தவிர்ப்பதற்காக பலவகைகளில் பல காரியங்களில் ஈடுபடுவது வழக்கம், தனக்கு பிடிக்காத வகுப்புகளை தவிர்க்க கட் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போவது, வகுப்பை கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்ற பல காரியங்களில் ஈடுபடுதல் வழக்கம், ஆனால் இங்கு ஒரு மாணவன் படிப்பின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக அதில் இந்து தப்பிக்க சக மாணவனையே கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஃபுல் மப்பில் வந்து ஹோட்டல் வாசலில் வாந்தி எடுத்த அட்வகேட்.. தட்டிகேட்டதால் உரிமையாளர் மண்டை உடைப்பு..!
டெல்லி மீரட் விரைவுச் சாலையில் மசூரி சேர்ந்த 16 வயது மாணவன் 13 வயது நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்,
பெற்றோர்கள் தொடர்ந்து படிக்கச் சொல்லி டார்ச்சர் செய்து வந்ததால் படிப்பில் இருந்து தப்பிக்க அந்த மாணவன் இந்த காரியத்தை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்காக கடந்த 5 மாதங்களாக திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மசூரியில் வசிக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது நண்பனை குற்றம் சாட்டப்பட்ட மாணவன் விளையாட அழைத்துச் சென்றான், மீரட் விரைவுச்சாலை அருகே கார்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு உடைந்து கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து 16 வயது மாணவர் தன் நண்பனின் கழுத்தை அறுத்தார், அதில் ரத்த வெள்ளத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார், பின்னர் அந்த மாணவனின் உடலை அருகில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு மாணவன் தப்பிச் சென்றான்,
இதையும் படியுங்கள்: ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! வசமாக சிக்குகிறார் பாஜக பிரமுகர்? பதற்றம்!போலீஸ் குவிப்பு
பலியான மாணவன் மசூரியை சேர்ந்தவன், அவனது தந்தை தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார், பின்னர் இது குறித்து தெரிவித்துள்ள போலீசார் பெற்றோரிடம் விசாரித்ததில், பிற்பகல் 3 மணியளவில் தனது மகனை அந்த மாணவன் விளையாட அழைத்துச் சென்றான், ஆனால் அந்த மாணவனின் யார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை, இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி கொலையில் ஈடுபட்ட மாணவனின் வீட்டுக்கு நேரில் சென்றனர், ஆனால் அந்த மாணவன் அங்கு இல்லை, ஆனால் மசூரியில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே இரவு 7 மணி அளவில் டீக்கடையில் அந்த மாணவர் நின்று கொண்டிருந்தான்.
இதனையடுத்து போலீசார் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர், அதில் அந்த மாணவன் கூறியதை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளார், தொடர்ந்து தன்னை பெற்றோர்கள் படிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தனர், ஆனால் தனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை, தொடர்ந்து தேர்வில் தோல்வி அடைந்து வருவதால், பள்ளியை மாற்றினர், பள்ளிக்கூட படிப்பு மீது வெறுப்பு ஏற்பட்டது. மொத்தமாக பள்ளிக்கு முழுக்கு போட முடிவு செய்தேன்.
அதனால் யாரையாவது கொலை செய்தால் அதில் இருந்து தப்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன், அதனால் கடந்த 5 மாதமாக கொலைக்கு திட்டமிட்டு வந்தேன், சில திரைப்படங்களை பார்த்து இந்த கொலையை அரங்கேற்றினேன் என அந்த மாணவன் கூறினான். இந்நிலையில் போலீசார் மாணவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.