முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு.. சிலை கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் !!

By Raghupati R  |  First Published Nov 7, 2022, 4:09 PM IST

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி-யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அப்போதைய சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் என் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்தார். இந்த விவகாரம் பற்றி சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்

ஆனால், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ அதிரடியாக நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.

அதில் திருவள்ளூர் மாவட்ட  முன்னாள் டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் விவகாரத்தில் பழவலூரில் 13 கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க..Price Hike: விலை உயரும் டீ,காபி.. எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதன் தீர்ப்பு வரும் முன்பாகவே அவர் மீது சிபிஐ திடீரென வழக்கு பதிவு செய்து இருப்பது, தமிழக காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க..கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!

இதையும் படிங்க.டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!

click me!