திருப்பூரில் டிக்டாக் விவகாரத்தில் மனைவியைக் கொன்ற கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் உள்ள செல்லம் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு வயது 38. இவரது மனைவி சித்ரா. இவருக்கு வயது 35 ஆகிறது.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் சித்ரா கூலி வேலை செய்து வந்தார். அதன் பிறகு டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டினார். இதற்கு கணவர் அமிர்தலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
undefined
இதையும் படிங்க.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக் டாக் மூலம் அறிமுகமானவர்களுடன் சினிமாவில் நடிக்க சென்னை சென்றதாக தெரிகிறது. இதற்கு அமிர்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையும் மீறி சித்ரா சென்னை சென்று சில மாதங்கள் தங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து திருப்பூர் திரும்பியுள்ளார் சித்ரா.
இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்ரா அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். அக்கம் பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரும் சமாதானம் அடைந்துள்ளனர். இதையடுத்து சித்ராவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க..Price Hike: விலை உயரும் டீ,காபி.. எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!
இதற்கிடையே காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, சித்ரா கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அமிர்த லிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சித்ரா கழுத்தில் காயம் இருந்ததால், துப்பட்டா அல்லது சேலையால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!