"நாங்க அக்கா - தம்பி" பொய் சொல்லி லிவிங் டுகெதர் வாழ்க்கை - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

Published : Jul 24, 2022, 04:21 PM IST
"நாங்க அக்கா - தம்பி" பொய் சொல்லி லிவிங் டுகெதர் வாழ்க்கை - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

சுருக்கம்

தஞ்சாவூர் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (23). இவருக்கும் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(20) என்பவக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பணியாற்றி வந்தபோது மீண்டும் சந்திப்பு ஏற்பட்டு நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். அக்கா தம்பி என்று சொல்லி குடியேறி இருக்கின்றனர்.நாங்கள் வறுமையாக இருப்பதால், சென்னை வந்து வேலை செய்து வருகிறோம் என்று கூறினார். பிறகு ஒருநாள் சந்தோஷ் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

தன்னுடன் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த மஞ்சுளா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் சந்தோஷ். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து,  உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், சந்தோஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மஞ்சுளாவை சந்தோஷே கொலை செய்துள்ளார்.

மஞ்சுளா தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் மஞ்சுளா மற்றும் சந்தோஷ் ஆகியோர் தஞ்சாவூர் பகுதியில் ஒன்றாக பணிபுரிந்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளதும், அதன் பின்னர் இருவரும் 4 மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இருவரும் தஞ்சாவூர் பகுதியில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த போது நட்பு ஏற்பட்டு பின் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததும் தெரிய வந்தது.  

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

பின்னர், சென்னைக்கு சென்றால் அங்கு வேலை பார்த்து சந்தோஷமாக இருவரும் இருக்கலாம் எனப்பேசி கடந்த 4 மாதங்களுக்கு முன் மஞ்சுளாவும், சந்தோஷ் குமாரும் சென்னை வந்து பின்னர் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் மாதம் ரூ.3000 ஆயிரம் வாடகையில் குடியேறியுள்ளனர். மஞ்சுளாவும் சந்தோஷ் குமாரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சமீப காலமாக சந்தோஷ் குமார் தினந்தோறும் மது குடித்துக் கொண்டும் கஞ்சா குடித்தும் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். 

சந்தோஷ் குமாரின் இந்த திடீர் போதை பழக்கத்தால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மஞ்சுளா இதனால் மனமுடைந்து சந்தோஷிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.  பிறகு தனது முன்னாள் காதலரிடம் பேச கடுப்பான சந்தோஷ் துப்பட்டாவால் மஞ்சுளாவை கொலை செய்தான் என்று விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது