
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு இந்த பெண்ணுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் பிரவீன் குமார் (26). இவரும் 19 வயதுடைய இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வெளியில் சுற்றி வந்தனர். இந்நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணியை மடக்கிய கொழுந்தன்.. ரூட் மாறியதால் ரோட்டிலே வைத்து என்ன செய்தார் தெரியுமா?
ஆனால், இதனை அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் பிரவீன்குமார் போட்டோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண்ணை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு பிரவீன்குமார் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த இளம்பெண் சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த காதலன் பிரவீன்குமார் நாம் இருவரும் உல்லாசமாக இருந்த போட்டோ என்னிடம் உள்ளது.
இதையும் படிங்க: சினிமா பாணியில் கார் மீது வெடிகுண்டு வீச்சு.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன்!
என்னுடன் உல்லாசமாக இருக்கவில்லை என்றால் அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த படத்தை அவரது வாட்ஸ்-அப்புக்கு பிரவீன்குமார் அனுப்பியுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை சிறையில் அடைத்தனர்.