தூத்துக்குடி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அண்ணனின் மனைவியை வாலிபர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் கீழதெருவைச் சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி சின்னமணி (வயது 35). வைரமுத்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். மேலும் சின்னமணி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
மேலும் இவர் தனது இரு குழந்தைகளுடன் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் வசித்து வந்துள்ளார். சின்னமணி கணவரின் உடன் பிறந்த தம்பி ராஜேஷ்கண்ணன் (20) என்பவர் எப்போதும்வென்றானில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னமணி இன்று காலை எப்போதும்வென்றானில் ரேஷன் பொருட்கள் வாங்கிவிட்டு, தாத்தா வீட்டில் இருந்த தனது குழந்தையை அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறுவதற்காக எப்போதும்வென்றான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
மக்கள் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் பேசினால் அநாகரிகமா? அமைச்சர் முத்துசாமி கேள்வி
அப்போது அங்கு வந்த ராஜேஷ்கண்ணன் சின்னமனியை சரமாரியாக வெட்டியதில் சின்னமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த எப்போதும்வென்றான் காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அண்ணனின் மறைவுக்குப் பிறகு வேறு ஒரு நபருடன் சின்னமணி தொடர்பில் இருந்ததால் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.