பெங்களூரு அருகே உள்ள பண்ணை வீட்டில் 32 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் ஜோஹனஹள்ளி என்ற கிராமத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் எப்போதுமே ஏதாவது சத்தம் கேட்டுக்கொண்டே இருக்குமாம். குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இந்த வினோத சத்தம் அதிகமாக கேட்குமாம். இதுகுறித்த தகவல் தங்களுக்கு வந்ததை அடுத்து காவல்துறையினர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த பூஜையறையில் பார்த்து அதிர்ந்து போனார்கள் காவல்துறையினர். அந்த முறை முழுவதும் மனித எலும்புகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 32 மண்டை ஓடுகளும், கை கால்களும் எலும்புகளும் அந்த அறையில் சிதறி கிடந்துள்ளது.
மெலும் அந்த அறையில் இருந்த ஷெல்ஃப்களில் மண்டை ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். அந்த மண்டை ஓடுகளின் நேற்றி விபூதி பூசப்பட்டிருந்தது. அந்த பூஜை அறைக்கு பக்கத்திலேயே இருந்த கட்டிலில் 2 மூட்டைகள் இருந்துள்ளது. அந்த மூட்டையிலும் மண்டை ஓடுகள் இருந்துள்ளது. மேலும் அந்த கட்டிலும், அருகில் இருந்த நாற்காலியும் மனித எலும்புகளாலேயே செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் பலராம் தான் இதற்கு காரணம். போலீசார் அந்த வீட்டில் நுழைந்த போதே பலராம் அங்கு சிறப்பு பூஜை செய்துள்ளார். போலீசாரை பார்த்து அதிர்ந்து போன அவர் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதாவது தான் ஓய்வெடுக்க வேண்டுமெனில் இந்த வீட்டிற்கு பலராம் வந்துவிடுவாராம். தனது வீட்டில் மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்யும் அவர் அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கே சென்று மண்டை ஓடுகளை வைத்து வணங்குவாராம். தனது பண்ணை வீட்டில் இரவில் மண்டை ஓடுகளை வைத்து சிறப்பு பூஜை செய்வதாகவும் பல்ராம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இப்படி, பூஜைகள் சடங்குகள் செய்யவே அப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டில் இருந்து மண்டை ஓடுகளை எடுத்து சேகரித்து வருகிறாராம். மேலும் இதில் சில மண்டை ஓடுகள் தனது மூதாதையர்களுடையது என்றும் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் எலும்பு கட்டில், எலும்பு சேர் மண்டை ஓடுகள் ஆகியவற்றை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.