எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ளக்காதல்! கடுப்பான லாரி ஓட்டுநர்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் (35). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணியளவில் கே.என்.ஜி.புதூர் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். 


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர். 

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் (35). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணியளவில் கே.என்.ஜி.புதூர் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெய்கணேசை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

Latest Videos

இதையும் படிங்க: மகள் சாதி மறுப்பு திருமணம்.! மருமகனை ஆணவக் கொலை செய்ய ஸ்கெட்ச்.! சிக்கிய தங்கை.! நடந்தது என்ன?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:  கணவரை கழற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் பிரியா எஸ்கேப்.. உல்லாசத்துக்காக பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்!

விசாரணையில் லாரி டிரைவர் சாமிநாதன் (45) என்பவரின் மனைவிக்கும், இறந்த ஜெய்கணேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த சாமிநாதன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக கொடுத்துள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த சாமிநாதன் ஜெய்கணேசை கொலை செய்ய திட்டமிட்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள சாமிநாதனை தேடி வருகின்றனர்.

click me!