இருட்டறையில் யுகேஜி சிறுமிக்கு பள்ளியில் வைத்து பாலியல் தொல்லை! தெனாவட்டாக பதில் அளித்த பிரின்ஸ்பல்!

By vinoth kumar  |  First Published Mar 7, 2024, 1:27 PM IST

யுகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை ஆசிரியர்கள் 2 பேர் இருட்டறைக்கு அழைத்து சென்று விளையாட்டு கேம் சொல்லி தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். 


சென்னை வித்யா மந்திர் எஸ்டேன்ஸியா தனியார் பள்ளியில் யுகேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரியில் வித்யா மந்திர் எஸ்டேன்ஸியா தனியார் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அப்போது, யுகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை ஆசிரியர்கள் 2 பேர் இருட்டறைக்கு அழைத்து சென்று விளையாட்டு கேம் சொல்லி தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால், சிறுமி கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டு வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: அலறும் தலைநகர்.. மிரளும் பொதுமக்கள்.. பள்ளி, கோவில்களை தொடர்ந்து சென்னை MIT கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இதில் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளனார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று புகார் கொடுத்தனர். ஆனால் எந்த பதற்றமும் இல்லாமல் பதில் அளித்த வித்யா மந்திர் எஸ்டேன்ஸியா பள்ளி முதல்வர் சங்கரி இதெல்லாம் பெரிதுப்படுத்த வேண்டாம் கூறி குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் நெருக்கமாக இருப்பதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என வாய்கூசாமல் பேசியுள்ளார்.

 இந்த புகார் தொடர்பாக பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதனையடுத்து கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராசையா (29) என்பவரும், மியூசிக் ஆசிரியராக இருந்த காயேஷ்குமார் (40) என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க:  வலியால் துடித்த சிறுமி! பாலியல் பலாத்காரம் செய்யும் போதே உயிரிழந்த பரிதாபம்! விசாரணையில் அம்பலமான பகீர்!

 மேலும் கைதான இருவரும் இதுபோன்று மற்ற சிறுமிகள் மற்றும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!