வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு

By Velmurugan s  |  First Published Mar 6, 2024, 4:39 PM IST

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி திடீரென மாயமானார். சிறுமியை பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் சிறுமி கிடைக்கவில்லை.

நாமக்கல்லில் 10000 போதை மாத்திரைகள் பறிமுதல்; 15 கூலி தொழிலாளர்கள் கைது

Tap to resize

Latest Videos

இதனிடையே புகார் அளிக்கப்பட்ட 36 மணி நேரத்தில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவேசத்தின் ஒரு பகுதியாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலையச் செய்தனர்.

அமைச்சர் மேடையில் பேசும்போது திடீரென பொங்கி எழுந்த பெண்கள்; எங்க ஊருக்கு என்ன செஞ்சீங்க என கேட்டு ஆவேசம்

இந்நிலையில் சிறுமியின் உடற்கூராய்வு இன்று நிறைவு பெற்றது. மேலும் ஆய்வு அறிக்கை சற்று நேரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்பட மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறுமியின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க சிறுமியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுவையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது.

click me!