பைக்கில் லிப்ட் கேட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

Published : Jun 05, 2023, 09:11 AM ISTUpdated : Jun 05, 2023, 09:13 AM IST
பைக்கில் லிப்ட் கேட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

சுருக்கம்

சென்னை வில்லிவாக்கம் சிவன் கோயில் அருகில் இரவு சிறுவன் ஒருவன் பைக்கில் அழுதபடியே சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் இருசக்கர வாகனத்தை  தடுத்து நிறுத்தியுள்ளனர். 

சென்னையில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் போக்சோவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் சிவன் கோயில் அருகில் இரவு சிறுவன் ஒருவன் பைக்கில் அழுதபடியே சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் இருசக்கர வாகனத்தை  தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த சிறுவனிடம் அழுவதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். அப்போது, அந்த சிறுவன் சொன்ன செய்தியை கேட்டு அப்பகுதியினர் அதிர்ந்து போயினர். 

இதையும் படிங்க;- வீடியோ காலில் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்ற இளம்பெண்.. ரூ.6.50 லட்சத்தை பறிகொடுத்த இளைஞர்! எப்படி தெரியுமா?

நான் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதாகவும், நான் பைக்கை ஓட்டி வந்த நபரிடம் லிப்ட் கேட்டதாகவும் கூறியுள்ளார். தனக்கு லிப்ட் கொடுத்த நபர் சொன்ன இடத்தில் இறக்கிவிடாமல் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.  சிறுவன் கூறியதை அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்துள்ளனர். 

இதையும் படிங்க;- நைட்டானாலே ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் பாலியல் தொல்லை.. தினமும் வலியால் துடித்த மனைவி!இறுதியில் நடந்த அதிர்ச்சி

இதனையடுத்து, அந்த நபரிடம் சம்பவம் குறித்து விசாரித்த வாய் திறக்காமல் அமைதியாக இருந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பதும் அவர் பாஜக பூத் வலிமைப்படுத்தும் இயக்கத்தில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ வழக்கில் பாலச்சந்திரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி