தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
டெல்லியின் பேகம்பூர் பகுதியில் ஒருதலைப்பட்ச காதல் விவகாரத்தில் ஒரு இளைஞர் பெண்ணை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பந்தப்பட்ட இருவரும் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக காவல்துறை கூறப்படுகிறது. அமித் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் அந்தப் பெண்ணிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ அவரது காதலை மறுத்துவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் அமித் அந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. அந்த பெண் உதவி கோரி அலறினார். அதைத் தொடர்ந்து மக்கள் உதவிக்கு விரைந்து வந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?
இதற்கிடையில், அமித் அங்கிருந்து தப்பி ஓடி, பின்னர் தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!