இப்படியும் ஒரு காதலனா.. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி.. அப்படியே சாலையில் வீசிவிட்டு சென்ற காதலன்.!

By vinoth kumarFirst Published Jun 2, 2023, 12:27 PM IST
Highlights

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி - சிதம்பரம் சாலையில் நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அரியலூர் அருகே சாலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி - சிதம்பரம் சாலையில் நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த இளம்பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மகள் அபிநயா (23) என்பது தெரியவந்தது. இவர் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பார்த்திபன் (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இதனிடையே, பார்த்திபனுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனை அறிந்த அபிநயா அதிர்ச்சி அடைந்து உடனே பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர், அவரை சமாதானம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, காப்பாற்ற யாரும் இல்லாததால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அபிநாயாவை அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார். 

உண்மையிலேயே விபத்தில் ஏற்பட்ட காயத்தால் தான் அபிநயா உயிரிழந்தாரா அல்லது தனது திருமணத்திற்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக காதலியை நேரில் வரவழைத்து அவரை கொலை செய்துவிட்டு பார்த்திபன் நாடகம் ஆடுகிறாரா? என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

click me!