தேனியில் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்டு பெண் கொடூர கொலை; காவல்துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Jun 2, 2023, 11:08 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்த பொன்னம்மாள் பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சமுத்திரக்கனி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். 

சமுத்திரகனி தனது முதல் மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2வது மகளை காந்திபுரம் பகுதியிலும் திருமனம் செய்து கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் காந்திபுரம் பகுதியிலேயே சமுத்திரக்கனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை சமுத்திரகனி தனது வீட்டின் முன்பாக ரத்தக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

3 காவலர்களின் கண்களில் மண்ணை தூவி ஓட்டம் பிடித்த கைதி; இறுதியில் நடந்த டுவிஸ்ட்

இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதி வழியாக பால் கறக்கச் சென்றவர்கள் பெண் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் சமுத்திரக்கனியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது கை, கால், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் தாக்கப்பட்ட வெட்டுக் காயங்கள் இருந்தன.

திருமண தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் சேர்த்து கொடுத்த கல்யாண வீட்டார்

இதனைத் தொடர்ந்து சமுத்திரகனியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வருசநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சொக்கர் என்ற நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

click me!