
சென்னையில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் நிஷாந்த் (23). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இரவு நிஷாந்த் வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கினர்.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு.. தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல்!
இதை கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாந்த் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று நிஷாந்தை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதில் நிஷாந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிஷாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 10 நாளில் பிரிந்த மனைவி! புதுமாப்பிள்ளை கொடூர கொலை! நடந்தது என்ன? வெளியாக பகீர் தகவல்.!
விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஷாந்த்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை நிஷாந்த் வெட்டியது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அஜித் தரப்பினர் நிஷாந்தை கொலை செய்திக்கலாம் என கூறப்படுகிறது. சென்னையில் வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.