விழுப்புரம் அருகே காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளை, கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - சென்னை சாலையில் ஒலக்கூரில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்ணின் உடல் அருகே நின்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை மாதவரம், திருமலை நகரைச் சேர்ந்த ரமேஷ் என்ற கல்லூரி இளைஞரும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி துணிக்கடையில் வேலை செய்து வந்த கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த பவித்ரா என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
தமிழகத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வளராது - அமைச்சர் ரகுபதி
undefined
இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல இருசக்கர வாகனத்தில் சென்றபோது திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர் கிராமத்தில் இளைஞர்கள் இருவர் அந்த பெண்னை கற்பழிக்க முயன்ற போது இளம்பெண் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி உயிரிழந்தார். கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக ஒலக்கூர் போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் என்பவர் கற்பழித்தது தெரியவந்தது.
இதனையடுத்து குற்றவாளியை போலீசார் விக்கிரவாண்டி பகுதியில் பிடித்த போது போலீசார் அய்யப்பன், தீபன் ஆகிய இருவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் குற்றவாளியை துப்பாக்கியால் கனுக்காலில் சுட்டு பிடித்தார். குற்றவாளியால் வெட்டு பட்ட இரு போலீசாரும், குண்டடிப்பட்ட குற்றவாளியும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சமபவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் குற்றவாளியால் அரிவாலால் தாக்கப்பட்டு காயமடைந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் தலைமை காவலர் தீபன் குமார் ஆகியோரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இளம் பெண்ணை வழிப்பறி செய்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது தப்பி ஓடி காரில் அடிபட்டு உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி உதய பிரகாஷ் மீது இரண்டு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டார், காயம் அடைந்த குற்றவாளி மற்றும் போலீசாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.