வீட்டில் தனியாக இருந்த 68 வயது மூதாட்டி கதற கதற கற்பழிப்பு; போதையில் இளைஞர் வெறிச்செயல்

By Velmurugan s  |  First Published Feb 28, 2024, 11:07 PM IST

கன்னியாகுமரியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கற்பழிப்பு செய்த போதை இளைஞனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 75 வயதுடைய அக்காளும், 68 வயது தங்கையும் என 2 மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் தங்கையான 68 வயது மூதாட்டிக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. அக்காள் வீட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்றும் அவர் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் 68 வயது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் நாகர்கோவில் தட்டான்விளையை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜ்குமார் (வயது33) அந்த வழியாக வந்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மூதாட்டி வீட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த ராஜ்குமார் வீட்டுக்குள் புகுந்தார். மேலும்  போதையில் இருந்த அவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Latest Videos

தமிழகத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வளராது - அமைச்சர் ரகுபதி

அப்போது மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து  பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்க முடியாத மூதாட்டி அழுது கொண்டே இருந்துள்ளார். அப்போது வேலை முடித்து வீட்டுக்கு வந்த அக்காளிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். உடனே தனது தங்கைக்கு நடந்த கொடூரத்தை குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

காவல் தெய்வம் கோனியம்மன் தேர் திருவிழாவுக்கு சீர்வரிசை எடுத்து வந்த போலீஸ்; தண்ணீர் விநியோகித்த இஸ்லாமியர்கள்

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வடிவீஸ்வரம் பகுதியில் மது போதையில் சுற்றித்திரிந்த ராஜ்குமாரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். அதேவேளை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட வாலிபர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பட்டப்பகலில் வீடுபுகுந்து மூதாட்டியை வாலிபர் குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!