நெல்லை பேட்டை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிச்சைராஜ்(50). அதிமுக பிரமுகர். இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார்.
நெல்லையில் அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிச்சைராஜ்(50). அதிமுக பிரமுகர். இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில் பார் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- உங்க கிட்ட தனியா பேசணும்! காட்டுப்பகுதிக்கு கூட்டி சென்று கதையை முடிக்க பார்த்த மனைவி! கணவர் தப்பியது எப்படி?
அப்போது, மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் பிச்சைராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பிச்சைராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- யார் வீட்டு பொண்ண யாரு காதலிக்கிறது.. இளைஞர் ஆணவக்கொலை? பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.