மனைவி & மருமகனை சுட்டு கொன்றுவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் - அதிர்ச்சி சம்பவம் !!

By Raghupati R  |  First Published Jul 24, 2023, 1:31 PM IST

புனேவில் உள்ள ஒரு போலீஸ்காரர் மனைவி மற்றும் மருமகனை சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


57 வயதான காவல்துறை உதவி ஆணையர் (ஏசிபி) திங்கள் கிழமையன்று மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தனது வீட்டில் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதற்கு முன்பு தனது மனைவியையும் மருமகனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பனர் பகுதியில் உள்ள ஏசிபி பாரத் கெய்க்வாட்டின் பங்களாவில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சதுர்ஷ்ரிங்கி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

கெய்க்வாட் அமராவதியில் ஏசிபியாக நியமிக்கப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். "திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், ACP முதலில் தனது மனைவியின் தலையில் சுட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு, அவரது மகனும் மருமகனும் ஓடி வந்து கதவைத் திறந்தனர். 

அவர்கள் கதவைத் திறந்தவுடன், அவர் தனது மருமகனைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கெய்க்வாட் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டார். மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்" என்று அவர் கூறினார்.

இறந்த மற்ற இருவர் போலீஸ் அதிகாரியின் மனைவி மோனி கெய்க்வாட் (44) மற்றும் மருமகன் தீபக் (35) என அடையாளம் காணப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த அதிர்ச்சி.. மணிப்பூரில் துயர சம்பவம்.. உயிருடன் எரிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி

click me!