கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்த அக்காவை கள்ளக்காதலனை ஏவி கொலை செய்து விட்டு, இறுதி சடங்கில் குத்தாட்டம் போட்ட தங்கையில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை
சென்னை மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வருபவர் மீனம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த 19 ஆம் தேதி இரவு எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் ராஜேஷ்வரி பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்து வந்துள்ளார். மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயில் இருந்து இறங்கி ராஜேஷ்வரி நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ்வரியை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்தது.
கள்ளக்காதலில் அக்காவை கொன்ற தங்கை
ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜேஷ்வரியை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் களம் இறங்கினர். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி, ஜெகதீசன், சூர்யா, ஜான்சன், சக்திவேல் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
குத்தாட்டம் போட்ட தங்கை
நாகவள்ளி சக்திவேல் என்ற இளைஞருடன் கள்ள உறவில் இருந்து வந்ததை சகோதரி ராஜேஸ்வரி கண்டித்து வந்துள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த நாகவள்ளி தனது அக்காவை கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்துள்ளனர். இந்தநிலையில் இறுதி சடங்கின் போது அக்கா ராஜேஷ்வரியின் உடலை பார்த்து அழுத கொலை செய்த தங்கை நாகவள்ளி, சிறிது நேரத்தில் மேள தாளத்திற்கு ஏற்ப குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்