ஒரே டார்ச்சர்.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு

Published : Mar 18, 2023, 08:13 AM IST
ஒரே டார்ச்சர்.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு

சுருக்கம்

தோழியின் தந்தையின் தொல்லையால் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ராவில் மைனர் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நடுத்தர வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆக்ராவில் தனது தோழியின் தந்தை தொலைபேசி மூலம் துன்புறுத்தியதால் மைனர் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மார்ச் 13 அன்று எட்மத்பூர் நகரில் இருந்து பதிவாகியுள்ளது.

இறந்தவரின் தந்தையின் கூற்றுப்படி, ராகவேந்திர சிங் சவுகான் என்ற நபர் தனது மகளை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். தனது புகாரில், சிறுமியின் தந்தை, சவுகான் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதாகவும், இது குறித்து சிறுமி தனது குடும்பத்தினரிடம் பலமுறை புகார் அளித்ததாகவும் கூறினார்.

இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தானா கந்தௌலி எஸ்ஹோ என்கே மிஸ்ரா, யமுனா விரைவுச்சாலை அருகே குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மீட்கப்பட்டதாகவும் கூறினார். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே கடுமையான பிரிவுகளின் கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி.. என்ன நடந்தது.?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி