சேலத்தில் வடமாநில தொழிலாளர் மர்மமான முறையில் மரணம்; காவல் துறையினர் விசாரணை

Published : Mar 17, 2023, 11:13 AM IST
சேலத்தில் வடமாநில தொழிலாளர் மர்மமான முறையில் மரணம்; காவல் துறையினர் விசாரணை

சுருக்கம்

சேலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை முற்புதரில் இருந்து மீட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே உள்ள நரசிம்ம செட்டிரோடு பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவரின் சடலம் முற்புதருக்குள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தோராஜ் அன்சாரி (வயது 41) என்ற வடமாநில தொழிலாளர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகளவில் மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஈரோட்டில் பாலை சாலையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்

மேலும் உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள் காணப்படுகிறது. வடமாநில தொழிலாளர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனியார் பருப்பு ஆலையின் உரிமையாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் கடை அமைப்பதில் மோதல்: முதியவர் வெட்டி படுகொலை

இதனிடையே உயிரிழந்த வடமாநில தொழிலாளர் அருகே இருந்த அவருடைய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றி அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி