குழந்தைகளிடம் பாசம் காட்டாத மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது

By Velmurugan s  |  First Published Mar 17, 2023, 3:03 PM IST

கோவை மாவட்டத்தில் முதல் மனைவின் குழந்தைகள் மீது பாசம் காட்டாத இரண்டாவது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதே போன்று அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னதுரையின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

இந்நிலையில் அனிதாவுக்கும் சின்னதுரைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேருக்கும் தலா இரண்டு குழந்தைகள் உள்ளன. இதை அடுத்து சின்னதுரையும், அனிதாவும் மறுமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சின்னதுரைக்கும், அனிதாவுக்கும் மது பிடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. ஆனால் அனிதா மது குடிப்பது சின்னதுரை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

மேலும் அனிதா சின்னதுரையின் மகள், மகனிடம் பாசம் காட்டாமல் வெறுப்புடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் - மனைவி இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அனிதா திடீரென வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சின்னதுரை தெரிவித்தார். 

கோவை மலை அடிவாரத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு மருத்துவர் குழு சிகிச்சை

ஆனால் தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அனிதாவின் மகன் கார்த்திக் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அனிதாவின் கழுத்தை இறுக்கிக் கொன்று தூக்கில் தொங்க விடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

திருச்சியில் கடை அமைப்பதில் மோதல்: முதியவர் வெட்டி படுகொலை

இதைத் தொடர்ந்து சின்னதுரையை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், அனிதா தன்னுடைய முதல் மனைவியின் குழந்தைகளிடம் பாசம் காட்டாமல் வெறுப்புடன் நடந்து வந்தார். மேலும் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாகவும், காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடியதாக அவர் கூறி உள்ளார். கைதான சின்ன துரையை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!