கள்ளகாதலியோடு உல்லாசம்.. தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

Published : Jul 12, 2022, 06:44 PM IST
கள்ளகாதலியோடு உல்லாசம்.. தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

சுருக்கம்

கணவன் இறந்த பெண்ணிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட நபருக்கும், பெண்ணின் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நிர்மல் நித்யா. இவரது‌ கணவர்‌ சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த நிர்மல் நித்யா உடன் அவரது தந்தை அருள்நாதன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நிர்மல் நித்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் சந்திரசேகர் என்பருடன் தகாத உறவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

இருவரும் அடிக்கடி கள்ளத்தொடர்பில் இருக்க, ஒரு கட்டத்தில் நிர்மல் நித்யா வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஒரு மாதமாக நிர்மல் நித்யா, சந்திரசேகருடன் இருந்த தொடர்பை கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், தன்னுடன் பழகிய போது வாங்கிய பணம் மற்றும் பொருட்களை திருப்பித் தருமாறு நிர்மல் நித்யாவுடன் தகராறு செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை மீண்டும் இதுதொடர்பாக நிர்மல் நித்யாவின் வீட்டிற்கு சென்று தகாறில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது, நிர்மல் நித்யாவின் தந்தை அருள்நேசன், தனது மகளிடம் அடிக்கடி தகராறு செய்ததால் உருட்டு கட்டையால் தாக்க முயன்றுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், அவரிடம் இருந்த கட்டையை பிடிங்கி அருள்நாதனை சரமாரியாக அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அருள்நேசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சின்னாளப்பட்டி காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சந்திர சேகரை கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. முடக்கப்படும் அதிமுக வங்கி கணக்கு? வங்கிகளுக்கு மாறிமாறி கடிதம் எழுதிய ஓபிஎஸ், இபிஎஸ்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!