பிரேக்அப் செய்த காதலி.. சோசியல் மீடியாவில் காதலியின் ஆபாச வீடியோவை காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

Published : Sep 23, 2022, 09:59 PM IST
பிரேக்அப் செய்த காதலி.. சோசியல் மீடியாவில் காதலியின் ஆபாச வீடியோவை காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

சுருக்கம்

காதலிக்க மறுத்த காதலியை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், ஆபாச வீடியோக்களை வைத்து காதலன் மிரட்டியுள்ளான்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் முத்தமிழன். இவருக்கு வயது 25 ஆகும். இவர் பிரபல நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை 2 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வந்துள்ளதால், அடிக்கடி வெளியூர் சுற்றியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !

அப்போது அந்த பெண்ணை மிரட்டி பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காதலன் முத்தமிழனின் நடவடிக்கை பிடிக்காததால், அந்த பெண் திடீரென காதலை பிரேக்அப் செய்துள்ளார்.  இரண்டு வருடங்களாக ஒன்றாக சுற்றி திரிந்து, பேசி பழகிய காதலி திடீரென காதலை முறித்து கொண்டதால் மனம் உடைந்திருக்கிறார் முத்தமிழன். மேலும் பல முறை அந்த பெண்ணிடம் பழக்கத்தை தொடர முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பெண் கண்டுகொள்ள்ளவில்லை.

மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!

காதலித்த காலத்தில் நெருங்கி பழகியபோது அவரை மிரட்டி தனது செல்போனில் எடுத்துக்கொண்ட இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளார் முத்தமிழன். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் அந்த பெண். காதலனிடம் சண்டையிட்ட அந்த பெண்ணுக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளான். உடனே அந்த பெண் காவல்துறையில் புகார் அளிக்க, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காதலன் முத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்

PREV
click me!

Recommended Stories

Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்