கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published Sep 23, 2022, 9:20 PM IST

வேலூரில் கள்ளகாதலால் ஒரு குடும்பம் சீரழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


வேலூர் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு வயது 40 ஆகும். இவர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இன்று காலை அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதைப்பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் 24 மணி நேரமும் மது,கஞ்சா கிடைக்கும்.. ஸ்டாலின் பிளான் இதுதான் - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

அதற்குள் தீயில் எரிந்தபடி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து மெயின் ரோட்டினை நோக்கி ரமேஷ் ஓடினார். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண் உயிருக்கு போராடி உள்ளார். அவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளனர். குடியாத்தத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு, அதேபகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி திலகவதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. திலகவதி அடிக்கடி ரமேஷ் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை திலகவதி, ரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அப்போது ரமேஷ் மீதும் தீ பற்றிக்கொண்டது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். எதற்காக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !

click me!