பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி வயிற்றை பிளேடால் கிழித்து சிகிச்சை... காப்பாற்ற போராடிய கிராம மக்கள்!

Sep 7, 2018, 2:15 PM IST

இந்தியா ஒரு பக்கம் வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருந்தாலும், அந்த வளர்ச்சி இந்தியா முழுவதுமான சீரான வளர்ச்சியாக இல்லை . இதற்கு இந்த செய்தியும் ஒரு உதாரணம் தான். 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணிஒருவரை பிரசவத்திற்காக 7 கிலோ மீட்டர் வரை தூக்கி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியான முத்தம்மா எனும் பெண் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்திருக்கிறார். வாகனவசதிகள் அதிகம் இல்லாத சரியான பாதை கூட அமைக்கப்படாத கிராமமாக அந்த பகுதி இருந்ததால் முத்தம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 7 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி செல்ல முடிவு செய்திருக்கின்றனர். 

ஸ்ட்ரெச்சர் கூட இல்லாமல் ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி அதில் அவரை உட்கார வைத்து அழைத்து சென்றிருந்திருக்கின்றனர்,

பாதி வழியிலேயே அவருக்கு வலி அதிகமானதால் அங்கேயே வைத்து அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. பிறந்த குழந்தையில் தொப்புள் கொடியை கூட பிளேடால் தான் அறுத்திருக்கின்றனர். குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டதால் மருத்துவமனை செல்லும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு பாதியிலேயே வீடு திரும்பி இருக்கின்றனர்.

இந்த வீடியோவை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் படம் பிடித்து இணையத்தில் போட்டிருக்கிறார். எத்தனையோ முறை தங்கள் நிலையை எடுத்து சொல்லியும் பதில் தராத அரசாங்கத்திற்கு, இப்படியாவது தங்களின் கஷ்டத்தை புரியவைத்திடலாம் என அவர் எடுத்திருக்கும்  முயற்சி தான் இந்த வீடியோ.