பெங்களூருவில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் இருவர் 8 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவின் ஜிகானியில் இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் மூன்று பைகளில் அடைக்கப்பட்டு, மூன்று வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கொல்லப்பட்ட நபரின் தலை மட்டும் கிடைக்கவில்லை. இந்தக் கொடூரக் கொலை குறித்து விசாரித்து வந்த பெங்களூரு போலீசார் தற்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டனர்.
சனிக்கிழமையன்று, பாக்யஸ்ரீ மற்றும் அவரது காதல் கணவர் சிவபுத்ரா ஆகிய இருவரையும் கைது செய்து இந்தக் கொலை வழக்கின் மர்மத்தைத் தீர்த்து வைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கராஜு சித்தப்பா பூஜாரி. இவரைச் சொந்த சகோதரியே தன் காதலருடன் சேர்ந்து கொன்றிருக்கிறார்.
பாக்யஸ்ரீயும் சிவபுத்ராவும் விஜயபுரா மாவட்டத்தில் கல்லூரி நாட்களில் இருந்தே நண்பர்கள். ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூருவுக்குச் சென்று ஜிகானி அருகே உள்ள வதேரமஞ்சனஹள்ளியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். ஜிகானி தொழிற்பேட்டையில் வேலை செய்துவந்தனர்.
இளம் பெண்களை ஏமாற்றிய பாதிரியார்... லேப்டாப் முழுவதும் ஆபாசப் படங்கள்!
ஒருநாள் பாக்யஸ்ரீயின் அண்ணன் லிங்கராஜு வீட்டிற்கு வந்து, சிவபுத்ராவுடன் தன் சகோதரிக்கு இருக்கும் உறவைத் தெரிந்துகொண்டபோது பிரச்சனை ஏற்பட்டது. பாக்யஶ்ரீ - சிவபுத்ரா இருவரின் உறவுக்கு லிங்கராஜு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியபோது சிவபுத்திரனும் பாக்யஸ்ரீயும் லிங்கராஜுவை தாக்கிக் கொன்றுவிட்டனர்.
ஆத்திரத்தில் செய்த கொலையை மூடி மறைக்க எண்ணிய பாக்யஶ்ரீ - சிவபுத்ரா இருவரும் லிங்கராஜுவின் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு பைகளில் அடைத்தனர். கைகளை அடைத்த பையை ஓர் இறைச்சிக் கடை அருகே வீசினர். மற்றொரு பையை அருகில் உள்ள ஏரியில் எறிந்தனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாக்யஶ்ரீ - சிவபுத்ரா தற்போது பாக்யஶ்ரீ - சிவபுத்ரா இருவரும் தங்கள் பெயர் முதலிய அடையாளங்களை மாற்றிக்கொண்டு மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த் தகவலின் பேரில் நாசிக் சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்திரா காந்தி ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும்: அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு