மகள் மீது சித்தப்பாவுக்கு வந்த வெறித்தனமான காதல்.. ஏற்க மறுத்ததால் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை..!

Published : Mar 19, 2023, 10:57 AM IST
மகள் மீது சித்தப்பாவுக்கு வந்த வெறித்தனமான காதல்.. ஏற்க மறுத்ததால் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை..!

சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா(21). அவர் தனியார் கல்லூரியில் பிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.  இவரது சித்தப்பா முறை உள்ள கருப்பையாவின் மகன் துரைக்கண்ணு (36) பவித்ராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

புதுக்கோட்டை அருகே மகள் முறை கொண்ட கல்லூரி மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால் அந்த மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா(21). அவர் தனியார் கல்லூரியில் பிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.  இவரது சித்தப்பா முறை உள்ள கருப்பையாவின் மகன் துரைக்கண்ணு (36) பவித்ராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். முறைதவறிய காதல் என்பதால் பெண் வீட்டார் மற்றும் பவித்ராவும் கடும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், விடாமல் பவித்ராவை தொந்தரவு செய்துள்ளார். 

இந்நிலையில், பவித்ராவின் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து அங்கு சென்ற துரைக்கண்ணு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை திட்டவட்டமாக ஏற்க மறுத்த பவித்ரா கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துரைக்கண்ணு கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பவித்ரா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததார்.  பின்னர் தனது வீட்டிற்கு சென்ற துரைக்கண்ணு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!