சிறுமிகளை பாலியன் வன்கொடுமை செய்த பிஎச்டி பட்டதாரி… கைது செய்தது சிபிஐ!!

By Narendran S  |  First Published Mar 18, 2023, 5:26 PM IST

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 35 வயது பிஎச்டி பட்டதாரி ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது. 


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 35 வயது பிஎச்டி பட்டதாரி ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது. குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தஞ்சையை சேர்ந்த பிஎச்டி பட்டதாரி விற்பனை செய்துள்ளார். மேலும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியன் வன்கொடுமை செய்து அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதனை விற்பனை செய்துள்ளார்.

இதையும் படிங்க: அம்மா என்ன அந்த டியூஷன் வாத்தியாரு நாசம் பண்ண பார்த்தாமா! கதறிய பள்ளி மாணவி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டது. அப்போது, குழந்தை பாலியல் வன்கொடுமை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. இதுக்குறித்து சிபிஐ கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து செய்துள்ளார். அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: திருச்சியில் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய வடமாநில இளைஞர் ஓராண்டுக்கு பின் கைது

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண் உட்பட இரண்டு மைனர்களை பாலியல் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் தனது கட்டளைகளை கேட்காதவர்களின் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. இதை அடுத்து அவரை கைது செய்த சிபிஐ அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

click me!