இலங்கையின் பிரபல தாதா அங்கோட லொக்கா கோவையில் இறந்தது எப்படி.? சிபிசிஐடி போலீசார் பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Mar 19, 2023, 1:37 PM IST
Highlights

இலங்கை தாதா அங்கோட லொக்கா மாரடைப்பால் தான் இறந்தார் என்று விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

தமிழகத்தில் இலங்கை தாதா

இலங்கையை அலறவிட்டுக்கொண்டிருந்த தாதா அங்கோட லொக்கா மீது 8க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளும் உள்ளன. இந்தநிலையில் இலங்கை போலீசாரால் தேடப்பட்டு வந்த அங்கோட லொக்கா கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து 2017 - ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக தங்கியிருந்துள்ளார்.  அவருடன் 27 வயதான அமன்னே தன்ஸீ என்ற பெண்ணும் அவருடன் தங்கி இருந்துள்ளார். இந்தநிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் அங்கோட லொக்கா திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்க தயார்.! கார்த்தி சிதம்பரம் அதிரடி

இலங்கை தாதா மர்ம மரணம்.?

முதலில் அங்கோட லொக்காவை யாரோ கொலை செய்து விட்டார்கள் என தகவல் பரவியது. இதனையடுத்து அங்கோட லொக்கா தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் கடந்த 2020 - ம் ஆண்டு ஜூலை 3 - ந் தேதி அன்று,  கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி இருந்த போது அங்கோட லொக்காவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். இது தொடர்பாக கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, இறந்தவரின் உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது, 

 வழக்கு விசாரணை முடிந்தது

இந்தநிலையில் மேலும் இறந்தவரின் அடையாளத்தை மறைத்ததாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் மற்றும் அமன்னே தன்ஸீ ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு தற்போது  விசாரணை முடிவடைந்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அங்கோட லொக்காவிற்கு  திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம், மேலும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் இறந்தது அங்கோட லொக்கா தான் என்று அடையாளத்தை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு வார காலத்திற்குள் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினர்.  

இதையும் படியுங்கள்

ஆளுநர் ரவியின் நாற்காலியை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற பேரூராட்சி ஊழியர்கள்.! கன்னியாகுமரியில் பரபரப்பு

click me!