சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த 62 வயது நபர்... போக்சோவில் கைது செய்தது காவல்துறை!!

Published : Sep 19, 2022, 08:24 PM ISTUpdated : Sep 19, 2022, 08:27 PM IST
சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த 62 வயது நபர்... போக்சோவில் கைது செய்தது காவல்துறை!!

சுருக்கம்

கோவையில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவை பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது வழக்கம். அதில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தனியாக செல்லும் நேரத்தில், 62 வயதான அந்த மளிகை கடையின் உரிமையாளர் நடராஜன், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதுடன், தொட்டுப் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேலைக்கு போன மகாலட்சுமி மீது பாலியல் இச்சை.. படுக்கைக்கு அழைத்து டார்ச்சர்.. 2 குழந்தைகளை விட்டு தீக்குளிப்பு.

மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனிடையே பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு பற்றி விளக்கினார். அப்போது 13 வயது மாணவி, தலைமை ஆசிரியையிடம் மளிகை கடைக்காரர் செய்த செயல்கள் குறித்து தெரிவித்தார். அந்த மாணவியை தொடர்ந்து 14 மாணவிகள் தங்களுக்கும் அந்த கடைக்காரர் பாலியல் தொலை கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 9 முதல் 13 வயதுக்குட்பட்ட 15 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரேசன் அரிசியை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை… ஒரு வாரத்தில் 174 பேர் கைது… 54 வாகனங்கள் பறிமுதல்!!

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், நடராஜனை பிடித்து விசாரனை மேற்கொண்டனர். அதில் அவர், பள்ளி மாணவிகள் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்