ரேசன் அரிசியை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை… ஒரு வாரத்தில் 174 பேர் கைது… 54 வாகனங்கள் பறிமுதல்!!

By Narendran SFirst Published Sep 19, 2022, 6:10 PM IST
Highlights

நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒரு வாரத்தில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒரு வாரத்தில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு  பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.  அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு குழந்தை இல்லை.. பக்கத்து வீட்டுப் பெண்ணை இழுத்துப் போட்டு குத்திய கொடூரன்.. நடு ரோட்டில் கொடூரம்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் படிங்க: காதல் மனைவி கடத்தல்; கணவர் கொடுத்த புகாரில் 10 பேர் கைது!!

அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி, 05.09.2022 முதல் 11.09.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற இருபத்து ஏழு லட்சத்து இருபத்தோராயிரத்து அறநூற்று மூன்று ரூபாய் மதிப்புள்ள, 4813 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.  அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 174 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!