மனைவிக்கு குழந்தை இல்லாததால் பக்கத்து வீட்டு பெண்ணை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. அந்தப் பெண் மாந்திரிகம் சூன்யம் வைத்ததால்தான் தனது மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் அந்த நபர் இந்த கொலையை அரங்கேற்றிதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இக்கொடூரம் நடந்துள்ளது.
மனைவிக்கு குழந்தை இல்லாததால் பக்கத்து வீட்டு பெண்ணை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. அந்தப் பெண் மாந்திரிகம் சூன்யம் வைத்ததால்தான் தனது மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் அந்த நபர் இந்த கொலையை அரங்கேற்றிதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இக்கொடூரம் நடந்துள்ளது.
எத்தனையோ கல்வி அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நாட்டில் மூடநம்பிக்கை பிற்போக்குத்தனம் மண்டிக் கிடக்கிறது. மந்திரம் மாந்திரீகம் போன்ற நம்பிக்கைகள் இன்னும் மக்கள் மத்தியில் இரண்டற கலந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் இதுபோன்ற செயல்கள் அதிகமாகவே உள்ளது, குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலம் மாந்திரீக பிரச்சினைகளை சமாளிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மூடநம்பிக்கை காரணமாக மக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் மாந்திரீகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது, சில நேரங்களில் கொலை செய்யும் சம்பவங்களும் மிக சகஜமாக நடந்து வருகிறது.
இந்த வரிசையில் கோரியா மாவட்டத்தில் போதி என்ற கிராமத்தில் தனது குடும்பத்திற்கு மாந்திரீகம் வைத்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டுப் பெண்ணை இளைஞர் படுகொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் மாந்திரீகம் வைத்ததால்தான் தன் மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால் இந்த கொலையை அந்த நபர் அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- கோரியா மாவட்டம் போதி கிராமத்தில் வசிப்பவர் உமேஸ் (22) இவருக்கும் அதை பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையும் படியுங்கள்: காதல் மனைவி கடத்தல்; கணவர் கொடுத்த புகாரில் 10 பேர் கைது!!
ஆனால் இதுவரையில் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அதே நேரத்தில் அவரது மனைவியும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தார், இதற்கிடையில் இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரேம் சாய் பாண்டே, கௌசிலியா தம்பதிகளுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கௌசிலியா அடிக்கடி பூஜை புனஸ்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார், இதனால் தனது குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு பக்கத்து வீட்டுப்பெண் கௌசிலியாதான் காரணம் என்ன உமேஷ் எண்ணினார். தனது மனைவிக்கு குழந்தை பிறக்கக் கூடாது என கௌசிலியா மாந்திரீகம் செய்து விட்டதாக அவர் நம்பினார்.
இதனால் பக்கத்து வீட்டுப் பெண்ணை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார், இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணி அளவில் கௌசிலியா அருகிலிருந்த குளத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார், அப்போது கூரிய ஆயுதத்துடன் காத்திருந்த உமேஷ் நடுரோட்டில் வைத்து கௌசிலியாவை சரமாரியாக குத்தினார். அதில் சம்பவ இடத்திலேயே கௌசிலியா ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் ஓடிவந்தார், அதற்குள் உமேஷ் தலைமறைவானார். இதடையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். கௌசிலியா சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள்: ஆபாச பேச்சு! அந்த இடத்தில் தொட்டு பேசி 14 மாணவிகளிடம் ஓயாத சில்மிஷம்! சேட்டை செய்த 62 வயது கிழவனுக்கு வேட்டு
இதைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர், அதில் உமேஷ் கைதுசெய்யப்பட்டார், அவரிடம் நடத்திய விசாரணையில் தனது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை நிலைவியது என்றும், திருமணமாகி சில ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை, அதற்கு கௌசிலியா தான் காரணம் என்ற அடிப்படையில் அவரை கொலை செய்ததாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.